தோனி கேப்டன்சியில விளையாடுறது கனவு… இளம் வீரரின் ஆசை!

வெள்ளி, 25 மார்ச் 2022 (11:31 IST)
ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ரஷீத் கான் ஐபிஎல் தொடரில் கவனம் ஈர்த்த வீரராக உருவாகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் தலைமையில் சி எஸ் கே அணி 4 முறை கோப்பையை வென்றுள்ளது. தற்போது 40 வயதாகும் அவர் இந்த ஆண்டு சி எஸ் கே அணியை தலைமையேற்று விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது தோனிக்கு பதில் ஜடேஜா கேப்டனாக தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பல வீரர்களும் ஜடேஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன. மேலும் தோனியை பற்றிய தங்கள் மேலான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் ரஷீத் கான் தற்போது தோனியைப் பற்றி பேசியுள்ளார்.

அதில் ‘ஒவ்வொரு வீரருக்கும் தோனியின் தலைமையில் விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கும்’ எனக் கூறியுள்ளார். இது வரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வந்த ரஷீத் கான் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்