சிஎஸ்கே கேப்டன் ஜடேஜாவுக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து!

வியாழன், 24 மார்ச் 2022 (17:42 IST)
சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனி கேப்டனாக அழகு பார்த்து உள்ளார் என்பதும் இதனை அடுத்து தோனி விரைவில் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக பதவி ஏற்க இருக்கும் ஜடேஜாவுக்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் 
 
சென்னை போன்ற அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க ஜடேஜாவை விட சிறந்த வீரராக வேறு ஒருவரை நினைத்து கூட பார்க்க முடியாது என்று கூறியுள்ள சுரேஷ் ரெய்னா என் சகோதரர் ஜடேஜாவுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் 
 
மேலும் பெருமகிழ்ச்சியுடன் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறேன் என்றும் சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்