சச்சின் மகன் அர்ஜுன் தற்போது கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவது போல, ராகுல் திராவிட் மகன் சமித், சுனில் ஜோஷி மகன் ஆர்யன் ஜோஷியும் தந்தை வழியில் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடி வருகின்றனர்.
2015 ஆம் ஆண்டு யு-12 கோபாலன் கிரிக்கெட் தொடரில் சமித் சிறந்த பேட்ஸ்மெனாகத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ராகுல் திராவிட் தற்பொது நியூஸிலாந்தில் யு-19 உலகக்கோப்பை இந்திய அணிக்கு பயிற்சி அளித்து வருகிறார்.