இதில் தென்ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 242 ரன்களும், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 244 ரன்களும் சேர்த்திருந்தன. பின்னர், 2 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா அணியில் டீன் எல்கர் [127] மற்றும் ஜே.பி.டுமினி [141] அவர்களின் அபார ஆட்டத்தில் 540 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி இலக்காக 539 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவின் அற்புதமான பந்துவீச்சில் [5 விக்கெட்டுகள்] ஆஸ்திரேலியா அணி சுருண்டது.