இரண்டு முக்கிய பவுலர்களுக்கு காயம்… பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு!

செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (08:07 IST)
இந்தியாவிடம் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு அந்த அணியின் முக்கிய பவுலர்கள் ஹாரிஸ் ரவுஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் காயமடைந்ததும் ஒரு காரணமாக அமைந்தது.

ஆட்டத்தின் பாதியிலேயே ஹாரிஸ் ராஃப் காயமடைய, அவருக்கு பதில் இப்திகார் அகமது பந்துவீசினார். அவரின் ஓவரில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்களை விளாசினார். அதே போல் இன்னிங்ஸ் முடியும் நேரத்தில் நசீம் ஷா காயமடைந்து வெளியேறினார். இவர்கள் இருவரும் பேட்டிங் செய்யவும் இல்லை.

இந்நிலையில் இவர்கள் இருவரையும் உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அணி நிர்வாகம், ஆசியக் கோப்பை தொடரில் இருந்து வெளியேற்ற உள்ளதாக சொல்லப்படுகிறது. இது ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்