பாகிஸ்தான் – இந்தியா டி20 போட்டியா? – பாகிஸ்தான் செய்திதாளால் பரபரப்பு!

வியாழன், 25 மார்ச் 2021 (08:47 IST)
இந்த ஆண்டில் இந்தியா – பாகிஸ்தான் இடையே டி20 தொடர் நடைபெறும் என பாகிஸ்தான் செய்திதாள் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி என்றாலே பெரும் பரபரப்பும், ஆர்வமும் எழுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த 2012 வரை இரு நாடுகளுக்கு இடையே சுற்று பயண ஆட்டங்கள் நடந்து வந்தன. அதற்கு பிறகான அரசியல் பிரச்சினைகளால் பல ஆண்டு காலமாக இருநாட்டு அணிகளுக்கும் இடையே போட்டிகள் நடைபெறாமல் உள்ளன.

உலக கோப்பை, ஆசிய கோப்பை போன்றவற்றில் மட்டுமே மோதிக் கொள்ளும் இரு அணிகளும் விரைவில் சுற்றுபயண டி20 ஆட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக பாகிஸ்தானை சேர்ந்த ஜங் என்ற செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தானும் விளையாட உள்ளது. அதை தொடர்ந்து அரசியலில் சுமூக சூழல் ஏற்பட்டால் சுற்று பயண டி20 சாத்தியமாகலாம் என நம்பப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்