நியூசிலாந்து 255ல் ஆல் அவுட்.. இந்தியாவுக்கு 359 டார்கெட்! - சாதிக்குமா இந்தியா!

Prasanth Karthick

சனி, 26 அக்டோபர் 2024 (10:42 IST)

இந்தியா - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து கை ஓங்கியிருக்கும் நிலையில் 359 ரன்களை டார்கெட்டாக கொண்டு இந்தியா களமிறங்குகிறது.

 

 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்து வரும் நிலையில் முதல் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் 259 ரன்களை குவித்த நியூசிலாந்து, இந்தியாவை 156 ரன்களில் சுருட்டியது.

 

தொடர்ந்து நேற்று மதியம் முதலாக தொடங்கிய இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 255 ரன்களை குவித்து இந்தியாவை விட 358 ரன்கள் முன்னணியில் உள்ளது. அதிகபட்சமாக டாம் லதாம் 86 ரன்களும், க்ளென் ப்ளிப்ஸ் 48 ரன்களும், டாம் ப்ளண்டல் 41 ரன்களும் அடித்தனர்.

 

இரண்டு இன்னிங்ஸும் சேர்த்து நியூசிலாந்து இந்தியாவை விட 358 ரன்கள் முன்னிலையில் உள்ள நிலையில் இந்தியா வெற்றி பெறுவதற்கு 359 ரன்கள் தேவையாக உள்ளது. இன்று இந்தியா அணி அதிரடி காட்டினால் மட்டுமே போட்டியை வெல்ல முடியும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்