82 ஆண்டுகால சாதனையை முறியடித்த மிஸ்பா உல் ஹக்

வெள்ளி, 15 ஜூலை 2016 (15:59 IST)
கடந்த 82 ஆண்டுகளில் அதிக வயதில் டெஸ்ட் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை பாகிஸ்தான் டெஸ்ட் அணி கேப்டன் மிஸ்பா உல் ஹக் படைத்துள்ளார்.
 

 
இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதல்நால் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்திருந்தது.
 
அந்த அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் 154 பந்துகளில் சதம் [17 பவுண்டர்கள் உட்பட] அடித்தார். இதன்மூலம், கடந்த 82 ஆண்டுகளில் அதிக வயதில் டெஸ்ட் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் அடைந்துள்ளார்.
 
முன்னதாக, கடந்த 1934ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் Patsy Hendren தனது 45 வயதில் சதம் அடித்தார். அவரை தொடர்ந்து 82 ஆண்டுகளுக்கு பிறகு மிஸ்பா தனது 42 வயதில் டெஸ்ட் சதம் அடித்து பெருமை அடைந்துள்ளார்.
 
மிஸ்பா உல் ஹக்கிற்கு இன்றுடன் 42 வயது, 47 நாட்கள் ஆகிறது. இதுவரை 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மிஸ்பா 10 சதங்கள், 32 அரைச்சதங்கள் உட்பட 4352 ரன்கள் குவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்