இதுவரை இந்த டீம்களை ஜெயிச்சதே இல்ல..! சிக்கலில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ்!

திங்கள், 22 மே 2023 (13:28 IST)
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் லீக் போட்டிகள் முடிந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ, மும்பை இந்தியன்ஸ் அணிகள் ப்ளே ஆப் சென்றுள்ளது.

பரபரப்பாக நடந்து வந்த ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. பெரும் போட்டியில் போராடி குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகளும் ப்ளே ஆப் முன்னேறியுள்ளன.

இனி நடக்க உள்ள 2 குவாலிபையர் மேட்ச் மற்றும் 1 எலிமினேட்டர் போட்டிகளில் இந்த நான்கு அணிகளும் மோத உள்ளன. இதில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நாளை மே 23ம் தேதியும், லக்னோ – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி மே 24ம் தேதியும் நடைபெற உள்ளது.



ஆனால் இதுவரை நடந்த லீக் போட்டிகளில் சென்னை அணி குஜராத் அணியை வென்றதே இல்லை. அதுபோல மும்பை அணியும் லக்னோ அணியை வென்றதே இல்லை. இதனால் இந்த ப்ளே ஆப் போட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அணிக்கு சாதகமான விஷயம் என்னவென்றால் இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவில்லை. சிஎஸ்கேவுக்கு சென்னை ஹோம் க்ரவுண்ட் என்பதால் அதற்கு ஏற்றார் போல கணித்து ஆடினால் வெற்றி பெற வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்