கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே மோசமான பார்மில் இருக்கும் துணைக் கேப்டன் ரஹானேதான் வழிவிட வேண்டி இருக்கும் என பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து சிறப்பாக விளையாடும் பட்சத்தில் கான்பூர் டெஸ்ட் போட்டியே ரஹானேவின் கடைசி போட்டியாக இருக்கக் கூட வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக் ரஹானேவை நீக்குவதால் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை எனக் கூறியுள்ளார். அவர் அளித்த நேர்காணலில் ரஹானே ஒருபோட்டியில் அமரவைக்கப்படுவதால், இந்திய அணிக்கு எந்தக் கெடுதலும் வராது. அவரை அமரவைப்பதால் அவர் மீதான் அழுத்தம் குறையும் எனக் கூறியுள்ளார்.