சுனில் நரைனின் ஆட்டம் இளம் வீரர்களைப் பாதித்தது… லக்னோ அணி கேப்டன் கே எல் ராகுல்!

vinoth

திங்கள், 6 மே 2024 (09:13 IST)
நேற்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில் புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடித்துள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி சுனில் நரேனின் அபார பேட்டிங் காரணமாக 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன் 39 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து 236 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய லக்னோ அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்த தோல்விக்குப் பின்னர் பேசிய கே எல் ராகுல் “சுனில் நரேன் ஆடிய விதம் எங்கள் அணி இளம் வீரர்கள் மேல் அழுத்தத்தை ஏற்படுத்தியது. நாங்கள் ஓய்வறையில் பேசும் முதல் விஷயமாக இதுதான் இருக்கும். பெரிய இலக்கை துரத்திய போது அதிரடியாக ஆடவேண்டும் என ஆடி சில விக்கெட்களை இழந்தோம். இந்த மைதானத்தில் 235 ரன்கள் என்பது அதிக இலக்குதான். 20 முதல் 30 ரன்கள் கூடுதலாக கொடுத்துவிட்டோம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்