ஜியோ சினிமாவில் உச்சம் தொட்ட பார்வையாளர் எண்ணிக்கை… நேற்றைய போட்டியைப் பார்த்தது எத்தனை பேர் தெரியுமா?

வியாழன், 13 ஏப்ரல் 2023 (14:59 IST)
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் 3 பந்துகளில் 7 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க தவறியதால் சிஎஸ்கே அணி போராடி தோல்வி அடைந்தது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தானி 175 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 176 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கடைசி ஓவரில் 21 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் முதல் இரண்டு பந்துகள் வைடு மற்றும் அடுத்த இரண்டு பந்துகள் சிக்ஸர் என மூன்று பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் மீதமுள்ள மூன்று பந்துகளில் ஏழு ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருந்தது. கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைபட்ட போது, தோனியால் சிங்கிள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் போட்டியில் சி எஸ் கே அணி தோல்வி அடைந்தது.

இந்த போட்டியை ஜியோ சினிமா செயலில் சுமார் 2.2 கோடி பேர் பார்த்துள்ளனர். இதுவே ஐபிஎல் பார்வையாளர்கள் எண்ணிக்கை உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்