ஐபிஎல் மெஹா ஏலமே வேண்டாம் என சில உரிமையாளர்கள் கூறுகின்றனர்… ஜெய் ஷா பகிர்ந்த தகவல்!

vinoth

வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (14:28 IST)
உலகக் கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் லீக் தொடராக ஐபிஎல் தொடர் உள்ளது. இதில் விளையாட உலகில் உள்ள அனைத்து வீரர்களும் ஆர்வமாக உள்ளனர். ஏனென்றால் ஒரு ஆண்டு முழுவதும் சர்வதேசக் கிரிக்கெட் ஆடி சம்பாதிக்கும் பணத்தை இரண்டே மாதங்களில் ஐபிஎல் விளையாடுவதன் மூலமாக சம்பாதித்து விடுவார்கள்.

இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனுக்குப் பிறகு அடுத்த ஆண்டு மெஹா ஏலம் நடத்தப்பட்டு வீரர்கள் ஏலத்தில் விடுவிக்கப்பட்டு புது அணிகள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் சில அணிகள் தக்கவைக்கும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து தற்போது பேசியுள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா “சில அணி உரிமையாளர்கள் மெஹா ஏலமே வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஆனால் அணியை சரியாகக் கட்டமைக்காத அணி உரிமையாளர்கள் மெஹா ஏலம் வேண்டும் என்று சொல்கிறார்கள். பிசிசிஐ –ஐப் பொறுத்தவரை கிரிக்கெட்தான் முக்கியத்துவம் கொண்டது. கலைத்துப் போட்டு விளையாடுவது உச்சபட்ச சுவாரஸ்யத்தைக் கொடுக்கும்” எனப் பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்