ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 215 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.
ஐபிஎல் -2023,16 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.
இன்றைய போட்டியில், இரு அணிகளும் டாஸ் போட அழைக்கப்பட்ட நிலையில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
இதில், மாட் 11 ரன்களும், பிராபிஸ்சிம்ரன் 26 ரன்களும், டேட் 29 ரன்களும், லிவிங்க்ஸ்டன் 10 ரன்களும், பாட்டா 41 ரன்களும், சுரான் 55 ரனகளும், ஷர்மா 25 ரன்களும் அடித்தனர். எனவே 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் அடித்து,மும்பை அணிக்கு 215 ரன்கள் வெற்றி இலக்காக் நிர்ணயித்துள்ளது.
மும்பை அணியின் சார்பில் அர்ஜூன் டெண்டுல்கர், ஜேசன், ஆர்சர் தலா 1 விக்கெட்டும், கிரீன் சாவ்லா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.