இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சர்வதேச தரவரிசையில் முதலிடம்

வியாழன், 13 மே 2021 (19:18 IST)
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சர்வதேச தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.

முந்தைய ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிபோல் உலகில் பலமிக்க அணியாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உள்ளது. சமீபத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 2-1 எனக் கைப்பற்றியது. ஆனால் முதலிடம் பெறவில்லை. பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி உலக டெஸ்ட் சேப்பியன்ஸிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் இன்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிக்கைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்திய அணி 121 புள்ளிகளுடன்(24போட்டி) முதலிடத்தில் உள்ளது.அடுத்து பாகிஸ்தான்,வெஸ்ட் இண்டீஸை வென்ற நியூசிலாந்து 120 புள்ளிகளுடன் (18 போட்டிகள்)2 ஆம் இடமும், இங்கிலாந்து 109 புள்ளுகளுடன்( ( 32போட்டிகள்) 3 ஆம் இடம் பிடித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்