உலகக் கோப்பை லீக் போட்டிகள்… 8400 கிமீ பயணம் செய்யும் இந்திய அணி!

புதன், 28 ஜூன் 2023 (09:17 IST)
13 ஆவது 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. முதல் முறையாக தொடர் முழுவதும் இந்தியாவில் மட்டுமே நடக்க உள்ளது. இதற்கான அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த தொடரின் லீக் போட்டிகளில் இந்திய அணி 9 போட்டிகளை 9 நகரங்களில் விளையாட உள்ளது. இதற்காக மொத்தமாக 8400 கிமீ பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி.

இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் பட்சத்தில் கூடுதலாக இன்னும் 1300 கிமீ தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். முழு உலகக் கோப்பை தொடரும் இந்தியாவில் நடக்க உள்ளதால் இந்த முறை இந்திய அணிக்கு கோப்பையை வெல்ல கூடுதல் வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்