தென்னாப்பிரிக்கா தண்ணீர் பஞ்சத்திற்கு உதவிய இந்திய அணி

புதன், 28 பிப்ரவரி 2018 (13:34 IST)
தென்னாப்பிரிக்கா-இந்திய அணிகள் இணைந்து கேப்டவுனில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்திற்காக ஒரு லட்சம் ரேண்ட் (இந்திய ரூபாய் மதிப்பில் 5.5 லட்சம்) நிதியுதவி அளித்தன.
 
தென் ஆப்பிரிக்காவின் 2வது பெரிய நகரமான கேப்டவுனில் முழுமையாக தண்ணீர் தீர்ந்துப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 40 லட்சம் பேர் வசிக்கும் கேப்டவுனில் மூன்று ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், பெரும்பாலான நீர் நிலையங்கள் வற்றி விட்டன.
 
இதனால் மக்களுக்கு தேவையான நீர் அளவிடப்பட்டு திறந்து விடப்படுகிறது. தினமும் மக்களின் தேவைக்காக தண்ணீர் திறந்துவிடப்படுவதால், தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே போகிறது. இதே நிலைமை அங்கு நீடித்தால் மக்களுக்கு குடிக்க  தண்ணீர் கூட இல்லாமல் போய்விடும் என பேசப்படுகிறது.
 
இந்நிலையில் தண்ணீர் பஞ்சத்தினால் அவதிப்படும் கேப்டவுன் மக்களுக்கு  தென்னாப்பிரிக்கா-இந்திய அணிகள் இணைந்து நிதியுதவி செய்த்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்