''ஆல் ஏரியாலயும் கில்லி'' இந்திய வீரர் ஜடேஜா புதிய சாதனை

சனி, 10 ஜூன் 2023 (13:53 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜடேஜா.  இவர் 64 டெஸ்ட்களில் விளையாடி 2,658 ரன்களும் 264 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார். ஒருநாள் தொடரில் 174 போட்டிகளில் விளையாடி 2526 ரன்களும் 191  விக்கெட்டுகளும் , டி20 தொடரில் 64 போட்டிகளில் விளையாடி 457 ரன்களும், 51 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.

இந்த நிலையில் டெஸ்ட். ஒரு நாள் போட்டி, டி20 என அனைத்து விளையாட்டுகளிலும் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய  இடது சுழற்பந்து வீச்சாளர்  என்ற சாதனையை ஜடேஜா படைத்துள்ளார்.

சமீபத்தில், நடைபெற்ற ஐபிஎல் தொடரில், ஜடேஜா இடம்பெற்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டைன்ஸ் அணியை வீழ்த்தி 5 வது முறையாக சாம்பியன் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

 
 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்