முதல் இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர் தவான் மற்றும் புஜாரா சதம் அடித்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன் கோலி சதம் விளாசினார். ஜடேஜா முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் எடுத்துள்ளார். இலங்கை அணியில் பெரிரா இரண்டு இன்னிங்ஸிலும் இறுதிவரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். முதல் இன்னிங்ஸில் 92 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.