அறிமுக வீரரின் அமைதியான சதத்தால் இந்தியா வெற்றி

சனி, 11 ஜூன் 2016 (20:29 IST)
அறிமுக வீரர் கே.எல்.ராகுலின் அமைதியான சதத்தால் ஜிம்பாப்வேவை வீழ்த்தி இந்தியா  வெற்றி பெற்றது.  


 

 
இந்தியா- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று ஹராரேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பீல்டிங் செய்ய தேர்வு செய்தார். இந்திய அணியில் சாஹல், கருண் நாயர் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகிய 3 பேர் புதுமுக வீரர்கள்.
 
முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 49.5 ஓவரில் 168 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
இதன் பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் விளையாட தொடங்கிய இந்திய அணி 42.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 173 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
அதில் பொறுமையான பொருப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய அறிமுக வீரர் கே.எல்.ராகுல் சிக்ஸர் விளாசி சதம் அடித்து இந்திய பெறச் செய்தார். முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடும் ராகுல், ஒருநாள் சர்வதேச போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்