455 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது இந்தியா: நம்பிக்கை அளித்த அஸ்வின்!

வெள்ளி, 18 நவம்பர் 2016 (13:27 IST)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி இரண்டாவது நாளான இன்று 455 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


 
 
151 ரன்களுடன் இன்றைய ஆட்டத்தை தொடங்கிய கேப்டன் விராட் கோலி 167 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 1 ரன்னுடன் கேப்டன் கோலியுடன் சேர்ந்து இன்றைய ஆட்டத்தை தொடங்கிய அஸ்வின் நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
 
அவருக்கு பக்கபலமாக ஜெயந்த் யாதவ் விளையாடினார். அஸ்வின் 58 ரன்னும், யாதவ் 35 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவருமே இன்றைய ஆட்டத்தில் குறிப்பிடும்படியாக விளையாடினர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வெளியேற இந்திய அணி 455 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
 
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 4 ரன் எடுத்திருந்த நிலையில் கேப்டன் குக்கின் விக்கெட்டை பறிகொடுத்து விளையாடி வருகிறது. தற்போது 12 ரன்னுக்கு 1 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணியின் ஹசீப் ஹமீதும் ஜோய் ரூட்டும் விளையாடி வருகின்றனர். முகம்மது சமி இந்திய தரப்பில் ஒரு விக்கெட் எடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்