ஆசியகோப்பை இறுதிப் போட்டியில் இடம்பெற்ற தமிழக வீரர்

சனி, 16 செப்டம்பர் 2023 (17:02 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில்  நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் அக்சர் படேல் இடம்பெற மாட்டார் என தகவல் வெளியாகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று தற்போது நடந்து வரும் நிலையில்,  நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில்  விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் அடித்து, இந்தியாவுக்கு 266 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவர்களில் 259 ரன்கள் மட்டுமே அடித்து தோற்றது. எனவே பங்களதேஷ் 6 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் நாளை ஆசிய கோப்பையில் இறுதி போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதவுள்ளன.

இந்த நிலையில், நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் அக்சர் படேல் இடம்பெற மாட்டார் என தகவல் வெளியாகிறது.

 நேற்றைய போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், நாளைய போட்டியில் அவருகுப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்