இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 208 ரன்கள் சேர்த்தும், அந்த இலக்கை வைத்து வெற்றிப் பெற முடியாமல் கோட்டை விட்டது. இதனால் இந்திய அணியின் பவுலிங் மற்றும் பீல்டிங் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதே போல கடந்த இரு மாதங்களுக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 211 ரன்கள் சேர்த்தும் தோல்வி அடைந்தது. இப்படி ஒரே ஆண்டில் 200 ரன்களுக்கும் மேல் சொந்த மண்ணில் சேர்த்தும் அதை வெற்றி பெறாமல் இழந்த ஒரே அணியாக இந்திய அணி உள்ளது. இந்த மோசமான சாதனையை வேறு எந்த ஒரு அணியும் படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.