உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியோடு வெளியேறிய இந்திய அணியை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் ரோஹித் ஷர்மாவை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமிக்க வேண்டுமென்றும் பல முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். மேலும் பல புதிய கேப்டன்களுக்கானா விவாதங்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில் இப்போது நியுசிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடருக்கு தலைமையேற்றுள்ள ஹர்திக் பாண்ட்யா, அடுத்து 2024 ஆம் ஆண்டு நடக்கும் டி 20 உலகக்கோப்பை தொடருக்கு இப்போது இருந்தே பயிற்சி போட்டிகள் தொடங்கி விட்டதாகக் கூறியுள்ளார்.