பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி & யுவ்ராஜின் முக்கியமான சாதனைகளை தகர்த்த பாண்ட்யா!

செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (08:54 IST)
ஹர்திக் பாண்ட்யா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு மிக முக்கியக் காரணியாக அமைந்தார்.

போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் புவனேஷ் குமார் மிக அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

பின்னர் பேட் செய்த இந்திய அணி இறுதி ஓவரில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பெற்றது. பேட்டிங்கில் பாண்ட்யா 17 பந்துகளில் 33 ரன்களை சேர்த்து கலக்கினார். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கலக்கிய பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் பாண்ட்யா யுவ்ராஜ் சிங்கின் ஒரு முக்கியமான சாதனையை தகர்த்தார். சர்வதேச டி 20 போட்டிகளில் 30 ரன்கள் மற்றும் 3 விக்கெட்களை ஒரே இன்னிங்ஸில் பெற்ற இந்திய வீரர்கள் பட்டியலில் 3 முறை நிகழ்த்தி ஹர்திக் பாண்ட்யா முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் யுவ்ராஜ் சிங் இரண்டு முறை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அதே போல 16-20 இறுதி ஓவர்களில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் தோனியோடு சமனில் உள்ளார் பாண்ட்யா. இருவரும் தலா 34 சிக்ஸர்களை விளாசியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்