திருநங்கைகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய கவுதம் கம்பீர்

ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2018 (15:00 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் திருநங்கைகளோடு ரக்‌ஷா பந்தன் கொண்டாடியுள்ளார்.

 
இன்று இந்தியா முழுவதும் ரக்‌ஷா பந்தன் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பெண்கள் தங்களது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுபவர்களுக்கு கயிறு கட்டுவது வழக்கம்.
 
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ரக்‌ஷா பந்தனை திருநங்கைகளோடு கொண்டாடி அசத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதவிட்டுள்ளார். அதில், ஆணாக இருந்தால் என்ன? பெண்ணாக இருந்தால் என்ன? மனிதனாக இருப்பதே அவசியம். 
 
அவர்களை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள்? என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்