ரஹானே அணியில் இருப்பதே அவர் கேப்டன் என்பதால்தான்… கம்பீர் சாடல்!

செவ்வாய், 23 நவம்பர் 2021 (09:48 IST)
இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் அஜிங்க்யே ரஹானே கடந்த சில மாதங்களாக அவுட் ஆஃப் பார்மில் இருக்கிறார்.

இந்திய டெஸ்ட் அணியின் முதுகெலும்பாக ஒரு காலத்தில் இருந்தவர் அஜிங்க்யே ரஹானே. ஆனால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அவர் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால் கோலி இல்லாத நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை வென்றுகொடுத்தார். இந்தியாவின் துணைக் கேப்டனாக இருக்கும் அவர் கோலி இல்லாத போது அணியை வழிநடத்தி செல்கிறார். நியுசிலாந்து அணிக்கு எதிராக நாளை மறுநாள் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியையும் அவரே தலைமையேற்று நடத்துகிறார்.

இந்நிலையில் அவரின் பார்ம் குறித்து பேசியுள்ள கவுதம் கம்பிர் ‘டிராவிட் தலைமையில் ரஹானே தனது குறைகளைக் களைந்து பார்முக்கு திருமப்வேண்டும். புஜாரா மற்றும் ரஹானேவுக்கு இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும். இல்லையென்றால் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட பல வீரர்கள் காத்திருக்கின்றனர். ரஹானே அணியில் நீடிப்பதே அவர் கேப்டன் என்பதால்தான். அவருக்கு இது அதிர்ஷ்டம்தான். இந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்வார் என நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்