இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக நியமனம்

திங்கள், 2 அக்டோபர் 2023 (18:19 IST)
இந்திய அணியின் முன்னாள்  கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா,  ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில் தற்போது உலகக்கோப்பைகான இந்திய அணி வீரர்கள் குழுவை பிசிசிஐ அறிவித்தது.

இந்த உலகக் கோப்பை தொடருக்காக  9 அணிகள் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில், 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ள 9 அணிகளும் பயிற்சித் தொடரில் விளையாடி வருகின்றன.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா,  ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்