பந்து தாக்கி மறைந்த வீரருக்கு ரூ. 20 கோடி இழப்பீடு

திங்கள், 7 நவம்பர் 2016 (14:17 IST)
மைதானத்தில் பந்து தாக்கி மரணமடைந்த ஆஸ்திரேலியா வீரர் பிலிப் ஹியூக்ஸ் குடும்பத்திற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ரூ. 20 கோடி நிவாரணம் வழங்கியுள்ளது.
 

 
கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிட்னி மைதானத்தில் நடைபெற்ற ஷெப்பீல்டு ஷீல்டு கோப்பை போட்டியின்போது, அப்பொழுது, நியூ சவுத்வேல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட் வீசிய பந்து, பிலிப் ஹியூக்ஸ்-இன் கழுத்துப் பகுதியில் தாக்கியது.
 
இதனால், பிலிப் ஹுயூக்ஸ் மைதானத்தில் சரிந்து விழுந்து பின் மரணமடைந்தார். இதனையடுத்து, பிலிப் ஹ்யூக்ஸின் மரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினார்.
 
பின்னர், அவர்கள் வெளியிட்ட விசாரணை அறிக்கையையில், ”ஹியூக்ஸின் தவறான கணிப்பே அவரது மரணத்திற்கு காரணம் என்றும் அவரது மறைவுக்கு மற்றவர்கள் பொறுப்பு இல்லை என்றும் தெரிவித்து இருந்தனர்.
 
ஆனால், அவரது குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ 20. கோடி வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததை அடுத்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஹியூக்ஸின் குடும்பத்திற்கு ரூ 20. கோடி வழங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்