நன் ஃபீல்டிங் செய்ய வரமாட்டேன்… அதுக்கு காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்!

vinoth

சனி, 23 மார்ச் 2024 (07:39 IST)
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐபிஎல் தொடர் நேற்று சென்னையில் தொடங்கியது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி முதலில் தடுமாறினாலும், பின்னர் சுதாரித்து 173 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் பேட் செய்த சி எஸ் கே அணியில் அனைத்து  வீரர்களும் அதிரடியாக விளையாடினர். இதனால் 19 ஆவது ஓவரில் நான்கு விக்கெட்களை இழந்து 176 ரன்கள் சேர்த்து  எளிதாக இலக்கை எட்டியது.

ஆர்சிபி அணியின் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார். ஆனால் அவர் இரண்டாவது இன்னிங்ஸின் போது ஃபீல்ட் செய்ய வரவில்லை. அவருக்கு பதில் அனுஜ் ராவத் விக்கெட் கீப்பிங் செய்தார். தான் பீல்ட் செய்ய வராதது குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் “எங்கள் அணி இந்த ஸ்கொரௌ டிஃபண்ட் செய்ய நன்றாக ஃபீல்ட் செய்யவேண்டும். அதனால் நான் ஃபீல்ட் செய்ய வரமாட்டேன். அது அணிக்குதான் நல்லது” எனக் கூறியுள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்