இந்நிலையில் காயத்தால் ஓய்வில் உள்ள இந்திய அணி பந்துவீச்சாளர் முகமது ஷமி லக்னோ அணி உரிமையாளரின் செயலை கண்டித்து பேசியுள்ளார். அதில் அவர் “கிரிக்கெட் ப்ளேயர்களுக்கு என்று ஒரு மரியாதை உண்டு. அணி உரிமையாளராக நீங்களும் மரியாதைக்குரிய நபர்தான். பலரும் உங்களை பார்த்து கற்றுக் கொள்வார்கள். இதுபோன்ற விவாதங்களை ஹோட்டலில் அல்லது ட்ரெஸிங் ரூமில் செய்திருந்தாலாவது பரவாயில்லை. மைதானத்தில் கோடிக்கணக்கான மக்கள் முன்னால் அவர் தன்னை இப்படி வெளிப்படுத்திக் கொள்வதன் அவசியம் என்ன? இப்படி நடந்து கொண்டதால் என்ன சாதித்தார்? இதனால் ஒன்றும் அவர் செங்கோட்டையில் கோடி ஏற்றிவிடவில்லை” என கூறியுள்ளார்.