தோனி இந்த ஆண்டோட ஓய்வா… ஷேன் வாட்சன் சொன்ன தகவலால் சி எஸ் கே ரசிகர்கள் குஷி!

செவ்வாய், 21 மார்ச் 2023 (16:01 IST)
சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா விலகியதை அடுத்து கடந்த ஆண்டு சி எஸ் கே அணியை இறுதி போட்டிகளில் தோனி வழிநடத்தினார். ஆனால் அப்போதும் அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியவில்லை.இதனால் ஜடேஜா அதிருப்தியில் இருந்ததாகவும், அவர் சிஎஸ்கே அணியில் இருந்து விலகுவார் என்று கூறப்பட்டது. மேலும் அவரது சமூக வலைத்தளத்தில் சிஎஸ்கே சம்பந்தப்பட்ட பதிவுகள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இந்த ஆண்டும் சி எஸ் கே அணிக்காகதான் விளையாட உள்ளார். ஆனால் கேப்டனாக தோனியே செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் சென்னை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தோனி பற்றி பேசியுள்ள முன்னாள் சி எஸ் கே வீரர் “தோனி இந்த ஆண்டோடு ஓய்வுபெறுவார் என நான் நினைக்கவில்லை. அந்தளவுக்கு அவர் பிட்டாக இருக்கிறார். அவர் இன்னும் சில ஆண்டுகள் விளையாடலாம்” எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்