கேப்டன்களுடன் டைரெக்ட் டீல்: தலைதூக்கும் ஸ்பாட் பிக்ஸிங்

செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (18:35 IST)
கிரிக்கெட் போட்டியில் மீண்டும் ஸ்பாட் பிக்ஸிங் தலைதூக்கியுள்ளது. இதற்கான டீலிங் தற்போது நேரடியாக அணி கேப்டன்களிடமே நடந்துள்ளது என தெரியவந்துள்ளது. 
 
ஜென்டில்மேன் கேம் என்று அழைக்கப்பட்டு வந்த கிரிக்கெட் சூதாட்டம், மேட்ச் பிக்ஸிங், ஸ்பாட் பிக்ஸிங் போன்றவற்றால் தனது மரியாதையை இழந்து வருவது வருத்தத்தை அளிக்கிறது. 
 
இந்நிலையில் சில ஆண்டுகளாக அடங்கியிருந்த ஸ்பாட் பிக்ஸிங் மீண்டும் தலைதூக்கியுள்ளது. அதாவது, ஐசிசி கூட்டத்தில் ஐசிசியின் ஊழல்தடுப்பு பிரிவின் மேலாளர் அலெக்ஸ் மார்ஷல் இது குறித்து சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். 
 
அதில், கடந்த ஓர் ஆண்டில் 5 முக்கிய அணிகளின் கேப்டன்களை ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபடக் கோரி பலர் அணுகி இருக்கிறார்கள். அந்த 5 அணிகளில் 4 அணிகள் ஐசிசியின் முழுநேர உறுப்புநாடுகள் என்பது அதிர்ச்சிகரமானது.
 
ஆனால், எந்த கேப்டன்களும் இதற்கு இணங்கவில்லை. அந்த கேப்டன்கள் பெயரை தெரிவிக்க விருப்பமில்லை. வீரர்களை அணுகிய பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பது மேலும் அதிர்ச்சிகரமான செய்தியாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்