இந்திய வீரர்கள் ஊசி போட்டுக்கொண்டு உடல்தகுதியை நிரூபிக்கிறார்கள்- சேத்தன் சர்மா அதிர்ச்சி கருத்து!

புதன், 15 பிப்ரவரி 2023 (08:40 IST)
இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ள சில கருத்துகள் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவுக்கு சேத்தன் சர்மா தலைமை வகித்து வந்தார். இவர்கள் தேர்வு செய்த அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால் இவர்கள் மேல் விமர்சனம் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் சேத்தன் சர்மா உள்ளிட்ட மொத்த தேர்வுக்குழுவும் கலைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. பிசிசிஐயின் இந்த முடிவை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி மகிழ்ச்ந்தனர்.

இந்நிலையில் விரைவில் புதிய தேர்வுக்குழு தேர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பழைய தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மாவே மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இப்போது ஒரு தொலைக்காட்சி உரையாடலில் பேசிய அவர் “இந்திய அணியில் வீரர்கள் முழு உடல் தகுதியும் இல்லாமல் இருக்கும்போதே ஊசிகளைப் போட்டுக்கொண்டு விளையாடத் தயார் என்று சொல்கிறார்கள். அவர்கள் 80 முதல் 85 சதவீதம் உடல்தகுதியோடு இருக்கும்போதே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு உடல்தகுதியோடு இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் அவை வலி நிவாரணி ஊசிகளில்லை.  அவர்கள் என்னவகையான ஊசிகளை எடுத்துக் கொள்கிறார்கள் என தெரியவில்லை.  வலி நிவாரணிகளை எடுத்தால் அதற்கு முறையான மருத்துவ பரிந்துரை வேண்டும். மேலும் அவை ஊக்கமருந்து சோதனைக்குக் கீழும் வரும்.  அவர்களுக்கு எந்த ஊசிகள் ஊக்கமருந்து சோதனையில் வெளிப்படாது என்பது தெரியும்” எனக் கூறியுள்ளார்.
சேத்தன் சர்மாவின் இந்த கூற்று கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்