நியூசிலாந்தை புரட்டி எடுத்த இந்தியா: புவனேஸ்வர் அபாரம்!

சனி, 1 அக்டோபர் 2016 (18:20 IST)
நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி கடைசி நேரத்தில் சஹாவின் சிறப்பான ஆட்டத்தால் கௌரவமான ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தனது முதல் இன்னிங்சில் 316 ரன்கள் குவித்தது.


 
 
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. 10 ரன்னில் முதல் விக்கெட்டையும், 10 ரன்னில் இரண்டாவது விக்கெட்டையும், 23 ரன்னில் மூன்றாவது விக்கெட்டையும் இழந்து தடுமாறியது அந்த அணி.
 
அணியின் எண்ணிக்கை 85-ஆக இருக்கும் போது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. அப்போது அந்த அணி 4 விக்கெட்டை இழந்திருந்தது. இதனால் ஆட்டம் மீண்டும் தொடங்க தாமதமானது.


 
 
மழைக்கு பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து வீரர்களும் இந்திய அணியின் பந்து விச்சை தாக்குபிடிக்க முடியாமல் பெவிலியன் திரும்பினர். அந்த அணியில் யாருமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 122 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது.
 
நியூசிலாந்து தரப்பில் டெய்லர் 36 ரன்னும், ரோஞ்சி 35 ரன்னும் எடுத்தனர். இந்தியா தரப்பில் அபாராமாக பந்து வீசிய புவனேஸ்வர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சமி, ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்