வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ரோஹித்தின் எதிர்காலம் என்ன?... ஆலோசனையில் பிசிசிஐ!

வியாழன், 23 நவம்பர் 2023 (07:06 IST)
ரோஹித் ஷர்மா தலைமையில் மிகச்சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தோற்று உலகக் கோப்பையை தாரைவார்த்தது. எல்லா திறமைகளும் உள்ள பலம்மிக்க அணியாக விளங்கிய இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றது 130 கோடி இந்திய ரசிகர்களின் மனதில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இந்திய அணி அடுத்தடுத்து வரவுள்ள தொடர்களில் கவனம் செலுத்த உள்ளது. இந்நிலையில் இப்போது ரோஹித் ஷர்மாவை அழைத்து அவரின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேச பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது 36 வயதாகும் ரோஹித் ஷர்மா எப்படியும் அடுத்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடப் போவதில்லை. அதனால் அவரிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு இந்திய அணியின் நிரந்தர வெள்ளைப் பந்து கேப்டன் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளுக்கு அவர் டெஸ்ட் அணிக்கான கேப்டனாக மட்டும் தொடர அறிவுரை வழங்குமென சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்