காயத்துடன் ஆடிய முகமது ஷமிக்கு 2.2 கோடி நஷ்ட ஈடு - பிசிசிஐ அறிவிப்பு

செவ்வாய், 12 ஜூலை 2016 (17:30 IST)
கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் காயத்துடன் ஆடிய முகமது ஷமிக்கு 2 கோடி நஷ்ட ஈடு வழங்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
 

 
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும், நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார்.
 
ஆனால், இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கு சில தினங்களுக்கும் முன்பே, பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும், பிசிசிஐ வலியுறுத்தியதால் போட்டியில் விளையாட வைக்கப்பட்டார் என்று தகவல் வெளியானது.
 
இதனால் 2015ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் இவர் இடம்பெறவில்லை. இந்நிலையில், முஹமது ஷமிக்கு 2 கோடியே 23 லட்சத்து 12 ஆயிரத்து ஐநூறு ரூபாய் இழப்பீடாக பிசிசிஐ வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
உலகக்கோப்பை தொடருக்கு பின் காயம் அதிகமானதால் ஐபிஎல் தொடரில் ஷமியால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்‌டதாகவும் பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்