நேற்றைய பரபரப்பான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது என்பது தெரிந்ததே. விராத் கோஹ்லி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். 185 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மழை குறுக்கிட்டது. அதனால் வங்கதேச அணிக்கு 16 ஓவர்களில் 151 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வங்கதேச அணியால் 145 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் இந்திய அணி த்ரில் வெற்றியைப் பெற்றது.
தோல்விக்குப் பின்னர் பேசிய பங்களாதேஷ் கேப்டன் ஷகீப் அல் ஹசன் “ஒவ்வொரு முறையும் நாங்கள் இந்தியாவுடன் விளையாடும் போது, வெற்றிக்கு அருகில் செல்கிறோம். ஆனால் வெற்றிப்பெறுவதில்லை. இதே கதைதான் நடக்க்கிறது” என வேதனையை வெளிப்படுத்தினார்.