ஆஸ்திரேலிய அணி இன்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த நிலையில் அந்த அணி மிக அபாரமாக விளையாடி 399 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 93 பந்துகளில் 104 ரன்கள் அடித்தார். ஆனால் மேக்ஸ்வெல் மிக அபாரமாக 44 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தார். அவர் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள், லாபுசாஞ்சே 62 ரன்கள் அடித்தனர். இந்த நிலையில் 400 என்ற இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ள நிலையில் இவ்வளவு பெரிய இலக்கை அந்த அணி எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.