இதில், ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் சதம் [109 ரன்கள்] அடித்தார். அதன்பின் ராஞ்சியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிலும் சதம் [178 ரன்கள்] விளாசினார்.
இதற்கு முன் ‘கிரிக்கெட் கடவுள்’ என்று கிரிக்கெட் விமர்சகர்களால் வர்ணிக்கப்படும் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் 961 புள்ளிகள் பெற்றதே, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகப் புள்ளிகள் பெற்ற சாதனையை படைத்திருந்தது.
அவருக்குப் பிறகு இங்கிலாந்தின் ஹட்டன் 945 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், ஹோப்ஸ் 942 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் பாண்டிங் 942 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.