16 ஆவது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் நேற்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.
இதையடுத்து ஆடிய ஆஸி அணியும் இந்திய பவுலர்களிடம் சரணடைந்தது. இந்திய அணிக் கேப்டன் பும்ரா மிகச்சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியா டாப் ஆர்டரை சிதைத்தார். இந்நிலையில் இரண்டாம் நாளில் தொடர்ந்து ஆடிய ஆஸி அணி 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி 46 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்திய அணி சார்பாக பும்ரா 5 விக்கெட்களையும், ஷர்தித் ராண் மூன்று விக்கெட்களையும், சிராஜ் 2 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினர்.