#AsiaCup2023 :பாகிஸ்தான் அணிக்கு 267 ரன்கள் வெற்றி இலக்கு

சனி, 2 செப்டம்பர் 2023 (21:00 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில், உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி, இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 

இந்த நிலையில் இந்திய அணி 4.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை பெய்தது. இதனை அடுத்து மைதானம் கவர்களால் மூடப்பட்டது 

மழை நின்ற பின் மீண்டும் போட்டி தொடங்கியது. இதில், ரோஹித் சர்மா 11 ரன்னும், சுப்மன் கில் 10 ரன்னும், விராட் கோலி  4 ரன்னும்  ஸ்ரேயாஷ் அய்யர் 14 ரன்னுடன் அவுட்டாகினர்.

தற்போது இஷான் கிஷன் 82 ரன்னும், ஹர்த்திக் பாண்டியா87  ரன்னும், பும்ரா 16 ரன்னும் எடுத்தனர்.

தற்போது இந்திய அணி அனைத்து விக்கெட்டும் இழந்து 48. ஓவர்களில் 266 ரன்கள் எடுத்து, பாகிஸ்தானுக்கு 267 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது. மழையால் பாகிஸ்தான் பேட்டிங் தாமதமாகும் என்று தெரிகிறது.

பாகிஸ்தான் தரப்பில், ஷாகீன் அப்ரிடி ரோஹித் சர்மா, கோலியை கிளீன் போல்டாக்கி மொத்தம் 4  விக்கெட் கைப்பற்றினார். ஹாரிஸ்  மறும் நசீம் தலா 3  விக்கெட் கைப்பற்றினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்