'விஜய் வேடத்தில் அஸ்வின்'.....எடிட் செய்த வீடியோவை வெளியிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்

வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (13:30 IST)
உலகக் கோப்பை தொடரில் அஸ்வின் இடம்பிடித்துள்ளதால் அவருக்கு பாராட்டு தெரிவித்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில் தற்போது உலகக்கோப்பைகான இந்திய அணி வீரர்கள் குழுவை பிசிசிஐ அறிவித்தது.

இந்த நிலையில், 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் காயத்தில் இருந்து மீளாத அக்ஸர் படேலுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம் இன்று முதல் தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி ஹவுகாத்திக்குச் சென்றுள்ளது.

இந்த  நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் உலகக் கோப்பை தொடரில் இடம்பிடித்துள்ளதால், நடிகர் விஜய்யின் மாஸ்டர் பட வீடியோவை எடிட் செய்து, விஜய்க்கு பதில் அஸ்வின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிடுள்ளனர். இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

2023 World Cup: Enter Ash Anna!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்