சச்சினின் மகன் அர்ஜுனும் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். தந்தை போல் அல்லாமல் ஒரு வேகப்பந்து வீச்சாளராக வளர்ந்து வருகிறார் அர்ஜுன். இந்நிலையில் எம்சிசி யங் கிரிக்கெட்டர்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார் அர்ஜுன். சர்ரே 2-வது லெவன் அணியின் நாத டைலி என்பவரை தனது பந்துவீச்சால் அர்ஜுன் க்ளீன் போல்ட் ஆக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.