அவர் இதுபற்றி பேசுகையில் “இந்திய அணியின் பந்துவீச்சு எப்போதுமே பலவீனமாக இருக்கும். இப்போது ஷமி மற்றும் சிராஜ் சிறப்பாக பந்துவீசுகின்றனர். ஜடேஜா அபாரமாக பந்துவீசுகிறார். பூம்ரா பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடி இருந்தாலும், அவர் கடைசியாக செப்டம்பர் மாதத்தில்தான் விளையாடினார். அதனால் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு இந்திய பந்துவீச்சு அச்சுறுத்தலாக இருக்காது. பாகிஸ்தான் அணி வலுவான இந்திய பேட்டிங்கை குறைவான ரன்களில் கட்டுப்படுத்திவிட்டால், பாகிஸ்தான் வெற்றி பெறுவது நிச்சயம்” எனக் கூறியுள்ளார்.