இந்திய அணியை தூக்கி நிறுத்திய அஸ்வின் - 5 விக்கெட்டுக்கு 234 ரன்கள் குவிப்பு

புதன், 10 ஆகஸ்ட் 2016 (17:13 IST)
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 234 ரன்கள் எடுத்துள்ளது.
 

 
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, டேரன் சமி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச தீர்மாணித்தது.
 
இதன் படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 1 ரன்னிலும், கேப்டன் விராட் கோலி 3 ரன்களிலும் வெளியேறினர். பின்னர், ரஹானேவும், கே.எல்.ராகுலும் நிதானமாக ஆடினர். அரைச்சதம் எடுத்த நிலையில் கே.எல்.ராகும் வெளியேறினார்.
 
இதனையடுத்து களமிறங்கிய ரோஹித் சர்மா 9 ரன்னிலும், 133 பந்துகளை சந்தித்து 35 ரன்கள் எடுத்து ரஜானேவும் வெளியேறினர். பின்னர் அஸ்வினும், விருத்திமான சஹாவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக ஆடிய அஸ்வின் அரைச்சத்ததை பதிவு செய்தார்.
 
முதல்நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 234 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்வின் 75 ரன்களுடனும், சஹா 46 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்