தென்கிழக்கு சீமைக்கு... தமிழ் சொந்தங்களை பார்க்க வரும் ஹர்பஜன் சிங்!

சனி, 16 மார்ச் 2019 (16:24 IST)
தமிழ் சொந்தங்களை பார்க்க ராணுவ வீரன் போல் வருவதாக கூறி, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது அழகு தமிழால் ரசிகர்களின் கொள்ளை அடிக்க வருகிறார்.
12-வது ஐபிஎல் போட்டி தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ளது. அடுத்த வாரம் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங் இடம் பெற்றுள்ளார். முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஹர்பஜன் சிங் கடந்த சில ஆண்டுகளாக சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். 
 
ஹர்பஜன் சென்னை அணிக்கு வந்ததிலிருந்தே தமிழ் சொந்தங்களோடு தமிழிலேயே விளையாடி வருகிறார். இவர் அடிக்கடி தமிழில் ட்விட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தீபாவாளி, தமிழர் திருநாள், தமிழ் மக்களின் பிரச்சினைகள், கஜாபுயல் பாதிப்பு அனைத்தும் ஹர்பஜன் தமிழில் ட்விட் செய்து தனது வாழ்த்துக்களையும், , வருத்தங்களையும் தெரிவித்து வருகிறார்.
 
 
ஹர்பஜன் சிங் தமிழில் ட்விட்செய்துள்ளார். அதில் " பேரன்பிற்கும்,பெருமதிப்பிற்குரிய என் அருமை சென்னை ஐபிஎல் ரசிகர்களே மீண்டும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க, தங்க தமிழ்தேசத்திற்கு வந்துவிட்டேன். ஒரு ராணுவ வீரன் வருடத்திற்கு ஒரு முறை தன் சொந்தங்களை பார்க்க ஆனந்த கண்ணீருடன் வருவான். அதே உணர்வு தான் என்னுள் இப்போது #விசில்போடு, #சிஎஸ்கேபேன்அபிஷியல் " என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்