தொடர்ந்து மாதா உருவம் பொறித்த கொடி புனிதம் செய்யப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. அப்போது வானில் நிகழ்த்தப்பட்ட கண்கவர் வானவேடிக்கை நிகழ்வு பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதில் வேளாங்கண்ணி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் என மூன்று மதங்களை சேர்ந்தோரும் மத பாகுபாடின்றி பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் ஆரிய நாட்டு மீனவ சமுதாய பஞ்சாயத்துதாரர்கள்,பேரூராட்சி மன்ற தலைவர் டயானா சர்மிளா, துணைத் தலைவர் தாமஸ்ஆல்வா எடிசன், பேரூர் மன்ற உறுப்பினர்கள்,அனைத்து சமுதாய பஞ்சாயத்துதாரர்கள், பொதுமக்கள், ஆத்மா குழு உறுப்பினர் மரிய சார்லஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.