மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒமேகா-3 மீன்களில் அதிகமாக உள்ளது. பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக பொரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மர்றும் வைட்டமின் ‘டி’ உள்ளது. இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது, நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு, மூளை செல்களையும் நன்கு செயற்பட வைக்கிறது.
பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிலும் பசளைக் கீரை, பீட்ரூட் போன்றவற்றை உண்பதால் ஞாபக சக்தியை அதிகரிப்பதுடன், இதில் இருக்கும் விற்றமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.