# பொதுத்துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு வழங்கும் மூலதன நிதியை மிகக் குறைவான தொகையை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த ஆண்டு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.25,000 கோடி தொகை ஒதுக்கப்பட்ட நிலையில் பொதுத்துறை வங்கிகள் ஏமாற்றம் அடைந்துள்ளன.
# ஜிஎஸ்டி மசோதா எந்த தேதிக்குள் அல்லது எந்த மாதத்திற்குள் திட்டவட்டமாக, நடைமுறைக்கு வரும் என, பட்ஜெட்டில் கூறப்படவில்லை.
# பொதுத்துறை நிறுவனங்களில், மத்திய அரசு நிர்வகித்து வரும் பங்குகளில், கணிசமான அளவை விற்பனை செய்து, ரூ.45,500 கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது எந்த அளவுக்கு பலன் கொடுக்கும் என தெரியவில்லை.